ஆப்கானிஸ்தானின் ஹெராயின் போதை பவுடர் வியாபாரத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிபருக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா திரித்துக் கூறி வருகிறது,'' என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயின் சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான் நாளை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பிராக இருந்த ஜே.வி.பி.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஓய்வு பெறதிட்டமிட்டுள்ளார். இளவரசர் சார்ல்சை மன்னராக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரித்தானியராணி எலிசபெத்துக்கு இப்போது 82 வயது ஆகிறது. அங்கு பாராளுமன்ற ஜனநாயக முறையில் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் மன்னராட்சி முறைதான் நடக்கிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே தவிர சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டியவர்கள் அல்ல என்பதனை தமிழகத்திலிருந்து வெளிவரும் மாலைமலர் என்னும் இணையத்தளம் நாசூக்காக இங்கு வெளியிட்டுள்ளது.

அனுராதப்புரம் பஸ்தரிப்பு நிலையத்தின் அருகாமையில் இன்று காலை புலிப்பயங்கரவாதிகளினால் தற்கொலை தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத்தற்கொலை தாக்குதலில் ஐ.தே.க வின் வடமத்திய மாகாணசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜனக்க பெரேரா கொல்லப்பட்டுள்ளார். இதில் 25பேர் கொல்லப்பட்டுள்ளதாக 65 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.






லெப் கேணல் இசையாளனின் நினைவுக் கவிமலர்..
இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 29 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. "கிளிநொச்சியை எந்த நேரத்திலும் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விடுவோம்' என, இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை –இந்திய உடன்படிக்கையின் பின்னர் பாக்குநீரிணையில்வைத்து ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டு பலாலி ராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லெப். கேணல் குமரப்பா லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு பயங்கரவாதிகளும் அன்ரன் பாலசிங்கம், மாத்தையா ஆகியோரால்(5-10-1987) நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட 21 வது நினைவு தினம் இன்று பிரபாகரனால் மறைமுகமான ஓரிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஒக்ஸ்போர்டு ஆங்கில அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்து சாதித்துள்ளார். அமெரிக்கா, நியூயோர்க்கை சேர்ந்தவர் அம்மோன் சேயா (37). இவர், மிகவும் புகழ் பெற்ற ஒக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் மனப்பாடம் செய்துள்ளார். 22 ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்ய, அவருக்கு ஒரு ஆண்டு காலம் ஆனது.
ஆப்கானிஸ்தானில் கொடிகட்டிப் பறக்கும் போதைப்பொருள் வியாபாரத்தில் அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாயின் சகோதரர் அகமது கர்சாய் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் ஹமீது கர்சாயும் அவருக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈழத் தமிழர்கள் எவரும் தமக்கு பிரச்சினைகள் இருப்பதாக தமிழகப் பயங்கரவாதிகளான சிறுத்தைப் புலிகளிடம் முறையீடு செய்தது கிடையாது.
கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முத லமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் பங்குபற்றினார்.அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் கலந்து கொண்டார்.
மக்களின் மனங்களில் தன்னம்பிக்கையும் தனித்துவமும் ஏற்படும் போதுதான் அண்றாட வாழ்க்கையில் முன்னேற்றமும் அதுபோன்று அபிவிருத்திகளும் ஏற்ப்படும்.--- காலம் சரியில்லை நேரம் சரியில்லை காலம் பதில் சொல்லும் கடவுள் பார்த்துக் கொள்வான் என்று காத்துக் கிடக்காமல் எங்கள் கடமைகளை காரியத்தைக் காலச் சூழலுக்கு ஏற்றபடி ஆற்ற முனைவது சாலச் சிறப்பானதாகும் யுத்தம் என்ற பிடியில் சிக்கிச் சொல்லொன்ணாத் துன்ப துயரங்களையும் உயிரிழப
வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் இருந்து உயிர் தப்புவதற்காகப் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் பொதுமக்களின் நன்மைக்காக முல்லைத்தீவு மாவட்டத்தி்ல் இரண்டு இடங்கள் மோதலற்ற வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் ஆவேசமான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. அதன் விமானப்படை, கடற்படை ஆகியவையும் முழு பலத்தையும் பயன்படுத்தி, தரைப்படைக்கு உதவி வருகின்றன. கடந்த ஒரு மாதமாகவே பயங்கரவாதிகளுடைய பகுதிகளின் மீது இலங்கை விமானப்படை குண்டுமாரிப் பொழிந்து வருகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த விருந்தில் கலந்துகொண்டோர்... (இடமிருந்து) நடிகைகள் ராஜசுலோசனா, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, நடிகர் எஸ்.எஸ்.ஆர்., எஸ்.வரலெட்சுமி, நல்லி குப்புசாமி, நடிகை மனோரமா. (நிற்பவர்கள்) எம்.என்.ராஜம், சாரதா, குட்டி பத்மினி, ராஜஸ்ரீ, மஞ்சுளா, நடிகர்கள் விஜயகுமார், ஏ.எல்.ராகவன்.
திரிஷா நடித்த `அபியும் நானும்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. பிரகாஷ்ராஜ் மகளாக இதில் நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீசாகிறது. தற்போது ஆர்யா ஜோடியாக சர்வம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கோவா கடற்கரையில் திரிஷாவும் ஆர்யாவும் ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இக் காட்சியில் திரிஷா நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடிக்கிறார்.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 6 அடிக்கும் மேல் உயரமுள்ளவர். இவரது அதிக உயரத்தால் படப்பிடிப்பு தளத்தில் பல வகைகளில் மிகவும் சிரமப்படுகிறாராம்.இது பற்றி அவரது காதலி நடிகை தீபிகா படுகோனேயிடம் கேட்டதற்கு, "எனக்கு உயரமானவர் காதலராகக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். அவர் உயரத்தைப் பார்த்துதான் நான் அவரைக் காதலித்தேன். என்னை அவர் தன் ஒரு கையாலேயே இடுப்பில் அணைத்து மேலே தூக்கிவிடுவார்.
ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் பிரேசில், பெரு நாடுகளில் `எந்திரன்' படப்பாடல் காட்சிகளில் நடித்து முடித்து நாடுதிரும்பியுள்ளனர். இருவாரம் நடந்த இப்படப்பிடிப்பில் இருவரும் கொசுக்கடியால் அவதிப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத மலைப்பகுதியிலும் காடுகளிலும் இருபாடல் காட்சிகளை ஷங்கர் படமாக்கினார். இரண்டு மணி நேரம் ஜீப்களில் பயணம் செய்தே படப்படிப்பு நடந்த இடத்தை அடைந்தனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா செயல்படக் கூடாது என்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல், கடந்த ஜூன் மாதம் 8ம் திகதி நடந்தது. இதில், பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலை எதிர்த்து இயக்குனர் ஆர்.சி.சக்தி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை நிலுவையில் உள்ளது.
இவ்வருடத்துக்கான சிறந்த கிரிக்கட் அணிக்கான ஐ. சி. சி. விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கட் சம்மேளன (ஐ. சி. சி.) விருது வழங்கும் வைபவம் நேற்று இரவு டுபாயில் நடைபெற்றது. இந்த வைபவத்தின்போதே இலங்கை அணிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் மஹேல ஜயவர்தன விருதைப் பெற்றுக்கொண்டார்.

29-வது ஒலிம்பிக் போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 8-ந்திகதி தொடங்கியது. நேற்றுடன் நிறைவு பெற்றது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை, போட்டியை நடத்திய சீனா தகர்த்தது. சீனா 51 தங்கம் குவித்து பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அந்த நாடு 21 வெள்ளியும், 28 வெண்கலமும் ஆக மொத்தம் 100 பதக்கம் பெற்றன.

பீஜிங் ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. சீன பாரம்பரியத்தை விளக்கும் கலைநிகழ்ச்சிகள், கண்கவர் வாணவேடிக்கை, அதிர வைக்கும் "லேசர் \ அடுத்த ஒலிம்பிக்கை நினைவுபடுத்தும் லண்டன் சாகசங்கள் என நிறைவு விழா நிகழ்ச்சிகள் அட்டகாசமாக நடந்தன.சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்தது.
கராச்சியில் நேற்று இடம்பெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி; குறிப்பிட்டுள்ளதாவது, அபாரமான ஆட்டத்தின் மூலம் நாட்டுக்கு கௌரவத்தை ஈட்டித்தந்த உங்களுக்கும் இலங்கை அணிக்கும் நான
இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டி இன்று கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெறுகின்றது டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் இப்போட்டியில் முறியடித்து விடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.